ஐரோப்பிய நாட்டில் பனி சிற்பம் உடைந்து விழுந்து குழந்தை பலி

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25-ந் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இப்போதில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.

அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க்கில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு சந்தைகள் உருவாக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் தலைநகர் லக்சம்பர்க்கில் உள்ள சந்தையில் நேற்று முன்தினம் இரவு ஏராளமான மக்கள் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது, சந்தையில் பார்வையாளர்களை கவருவதற்காக வைக்கப்பட்டிருந்த பனி சிற்பம் திடீரென உடைந்து, அதன் அருகில் நின்று கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையின் மீது விழுந்தது. இதில் அந்த குழந்தை உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது. இந்த பனி சிற்பத்தை உருவாக்கிய பிரான்சை சேர்ந்த சிற்பியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply