ஐ.தே.கட்சி எம்.பிக்கள் அனைவருக்கும் திடீர் அழைப்பு
ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தவிற்கு இன்றைய தினம் சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலுக்கான அறிவிப்புக்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அதன் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க ஆகியோர் விடுத்துள்ளார்.
இதன்போது, கட்சியில் தற்போது நிலவும் இன்னல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவி நிலை தொடர்பில் தெளிவுப்படுத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply