சட்டவிரோத பதாகைகளை அகற்றுமாறு உத்தரவு
உடன் அமுலுக்கு வரும் வகையில் முக்கிய நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத பதாகைகளை அகற்றுமாறு உத்தரவிடப்பட்டது. பொலிஸ் பிரிவின் சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதி பொறுப்பாய்வாளர் நாயகம் நிமல் பெரேராவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதியின்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளை நீக்குமாறே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் போஸ்டர்கள், பதாகைகள் காட்சிப்படுத்த வரையறுக்கப்பட்ட பகுதிகளை அடையாளப்படுத்துமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply