அரிசி விலையைக் குறைக்க அரசாங்கம் விசேட நடவடிக்கை : அமைச்சர் பந்துல

அரிசி விலையைக் குறைப்பதற்குத் தேவையான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கும் பொறுப்பு அமைச்சர் சமல் ராஜபக்ஸவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச களஞ்சியசாலைகளிலுள்ள நெல்லை, சிறிய நெல் கொள்வனவாளர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஸ அறிவித்ததாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply