இந்தியாவில் கோட்டாபய ராஜபக்சவின் விஜயத்தை எதிர்த்து போராட்டம் : ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கைது

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இந்திய விஜயத்தை எதிர்த்து டெல்லியில் போராடிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையிலேயே இன்றைய தினம் தனது முதல் வெளிநாட்டுப்பயணமாக கோட்டாபய ராஜபக்ஷ இந்தியா சென்றுள்ளார்.இதன் போது அவரின் வருகைக்கு எதிப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட வைகோகைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply