இலங்கை கடற்படையிடம் தலை வணக்கியது `வணங்கா மண்`

ஏப்பிரல் 20, 2009ல் பிரித்தானியாவில் உள்ள இப்ஸ்விச் எனும் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய `வணங்கா மண்` பிரான்ஸிலுள்ள ஃபேகம்ப் எனும் துறைமுகத்தில் வைத்து கப்பலில் உள்ள அனைத்துப் பொருட்களையும் தரையிறக்கியது. இறக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தரைமார்க்கமாக பிரான்ஸிலுள்ள இன்னொரு துறைமுகமான ஃபெஸ்-சூர்-மேர்க்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கப்பலில் ஏற்றப்பட்டு, மே 7, 2009ல் அங்கிருந்து புறப்பட்ட ‘வணங்கா மண்’ இன்று (ஜூன். 4) காலை கொழும்பிலிருந்து 160 கடல் மைல்கள் தொலைவில் இலங்கை கடற்படையிடம் `தலைவணங்கி`யுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழில் `வணங்கா மண்` எனவும் ஆங்கிலத்தில் `கருணைக் கடன்` என்ற `ஈரூடக` பெயருடன் சிரியாவில் பதிவு செய்யப்பட்ட `கப்டன் அலி` இன்று காலை இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் பயணம் செய்த 15 கப்பல் சிப்பந்திகளில் (2002-05) புலிகள்-அரசு யுத்தநிறுத்த காலத்தில் இலங்கை கண்காணிப்பு குழுவில் (SLMM) கடமையாற்றியவரும் மேற்படி`கப்டன் அலி` கப்பலின் கப்டனான ஐஸ்லாண்டைச் சேர்ந்த கிறிஸ்டியா கூமஸ்டாவும் அடங்குவர். கடற்படையால் `வணங்கா மண்` கைப்பற்றப்பட்ட போது அதில் 884 மெற்றிக் தொன் நிவாரணப்பொருட்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. இக்கப்பலும் இதில் பயணம் செய்தவர்களும் எவ்வகையான சட்ட நடவடிக்கைக்கு இலங்கையில் உட்படுவார்கள் என்பது எம்மால் இதுவரை அறிய முடியவில்லை.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply