ஈராக்கை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறும் ஒபாமா உறுதி

ஈராக்கை விட்டு அமெரிக்க ராணுவ வீரர்களை விலக்கிக்கொள்ள என் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்றும் அதோடு ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கொய்தா தீவிரவாதிகளை ஒடுக்குவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற ஒபாமா தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஒரு டி.வி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், எங்களின் முதல் வேலை பொருளாதாரத்தை சரிசெய்வது தான். ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப் பெறுவோம். ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள். அவர்களை அழித்து ஒழிப்பது தான் எங்கள் முதற்கடமை ஆகும். பின்லேடனை உயிருடன் பிடிப்பதோ அல்லது சுட்டுக்கொல்வதோ அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அத்தியாவசியம் ஆகும். கியூபாவில் உள்ள குவாண்டனமோ சிறை மூடப்படும் எனறார் அவர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply