பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைப்பது தொடர்பில் அறிக்கை கோரிய அமைச்சர் : டலஸ் அழகப்பெரும
தேர்தல் விதிமுறைகள் மற்றும் அரசியலமைப்பினை மீறி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பில் உடனடியாக அறிக்கையொன்றை பெற்றுத் தருமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அவ்வாறு சட்டவிரோதமான முறையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக வௌியான 427 கடிதங்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் சில கடிதங்களில் அமைச்சு செயலாளர்களின் போலியான கையெழுத்து இடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை மேற்கொண்டு 3 வாரத்தினுள் தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சின் விசேட விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply