பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் சந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவரை பாம்பு கடித்துவிட்டது. உடனே அவருடைய 2 மகன்களும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

ஊரிலிருந்து மருத்துவமனைக்கு செல்ல 8 கிலோ மீட்டர் தூரம் ஆகும். சீரான சாலை வசதியோ, வாகன வசதியோ கிடையாது. இதனால் மூங்கில் படுக்கை தயார் செய்து அதில் தாயை படுக்கவைத்து 2 மகன்களும் உறவினர்களும் தூக்கிச் சென்றனர். பான்செட் என்ற அணைப்பகுதியை அடைந்ததும் ஒரு ‘ஜீப்’ கார் மூலம் அருகிலுள்ள கானாபூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புனேயில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply