சொந்த செல்போனை பயன்படுத்துவதாக வந்த தகவலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மறுப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது தனிப்பட்ட செல்போனை பயன்படுத்துகிறார் என சி.என்.என். செய்தி வெளியிட்டது.அந்த செய்தியில், டிரம்பின் ரகசிய உரையாடல்களை வெளிநாட்டு உளவு அமைப்புகள் இடைமறித்து கேட்கவும், குறுந்தகவல்களை மடக்கவும் வாய்ப்பு இருந்தாலும்கூட, டிரம்ப் தனது சொந்த செல்போனைத்தான் பயன்படுத்துகிறார் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், “மீண்டும் மீண்டும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்தும்கூட நான் எனது சொந்த செல்போனை பயன்படுத்தித்தான் பேசுகிறேன் என சி.என்.என். செய்தி வெளியிட்டுள்ளது.சி.என்.என். வெளியிட்டது முற்றிலும் தவறான தகவல். நான் பல ஆண்டுகளாக சொந்த செல்போனை பயன்படுத்துவதில்லை. அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, வழங்கப்பட்ட செல்போனைத்தான் பயன்படுத்தி வருகிறேன்” என கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply