அங்கவீனமடைந்த படைவீரருக்கு 200 ஆட்டோக்கள் கையளிப்பு
யுத்தத்தினால் அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலனை கருத்திற்கொண்டு 200 முச்சக்கர வண்டிகள் நேற்று கையளிக்கப் பட்டன.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையக மைதானத்தில் இடம்பெற்றது.நாடளாவிய ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 படைவீரர்களுக்கு இதன்போது முச்சக்கர வண்டிகள், திறப்புகள் மற்றும் ஆவணங்களும் ஜனாதிபதி, முக்கியஸ்தர்களினால் கையளிக்கப்பட்டன.
ரணவிரு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா, ரணவிரு அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் விலிகமகே, இராணுவ பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் போது தமது கால்களை இழந்தவர்கள், குண்டு வெடிப்புக்கள் மற்றும் தாக்குதல்களில் அங்கவீனமடைந்த முப்படை வீரர்களும், மற்றும் பொலிஸாருக்கே இந்த முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.
பிரதேச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரணவிரு சங்கங்களின் சிபாரிசுக்கு அமைய ரணவிரு அதிகார சபை இந்த முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்து வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் மாதாந்தம் கட்டணம் செலுத்தும் வகையில் பெற்றுக்கொடுத்துள்ளதாக ரணவிரு அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.
அங்கவீன முற்ற படைவீரர்களின் பிரயாண வசதிகளை இலகுபடுத்தல், அவர்களது குடும்ப நடவடிக்கைகளை இலகுவாக முன்னெடுத்தல் மற்றும் அவர்களுக்கு மேலதிக வருமானங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரணவிரு சேவை அதிகார சபை பல முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. அவற்றில் ஜனாதிபதி ரணவிரு கெளரவிப்பு திட்டத்தின் கீழ் இந்த முச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே தடவையில் பெருந்தொகையான முச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டமை இதுவே முதற் தடவை என்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply