ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 63ஆவது வயதில் காலடி வைக்கின்றார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 63ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார். தென் மாகாணத்தில் வீர கெட்டிய பிரதேசத்தில் மெதமுலன வள வில் மாபெரும் அரசியல் பரம்பரையைச் சார்ந்த டி.ஏ. ராஜபக்ஷ தம்பதியினருக்கு புதல்வராக 1945ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்தார். ஆறு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாமவராக பிறந்த ஜனாதிபதி இளமைக்காலம் தொடக்கம் சிங்கள பௌத்த மரபுகளுக்கேற்ப வளர்க்கப்பட்டார்.
ஆரம்பக் கல்வியை காலி ரிச்மண்ட் கல்லூரியிலும் பின்னர் நாலந்தாக் கல்லூரியிலும், தேர்ஸ்டன் கல்லூரியிலும் கல்வி கற்றார். உயர்கல்வி முடிந்ததும் சட்டக்கல்லூரியில் இணைந்து சட்டம் பயன்றார்.
பின்னர் 1977 நவம்பரில் சட்டத்தரணியாக தகைமை பெற்றார். 1970இல் பெலியத்த தேர்தல் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். மிகக் குறைந்த 24 வயதில் இவ் உறுப்பினர் பதவி கிடைத்தமை வரலாற்று சிறப்பாகும். தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். 1994 தொடக்கம் இன்று வரையிலான ஆட்சிக் காலத்தில் பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதோடு 2004ஆம் ஆண்டு பிரதமராகவும் பதவி வகித்தார். எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உபதலைவர், உபசெயலாளர் பதவிகளை வகித்ததோடு தற்போது தலைமை பதவியை வகிக்கின்றார். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
பலஸ்தீன ஆதரவு இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். அதற்கு ஆதரவு வழங்கினார். இதன் காரணமாய் ரமல்லா நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் வீதியொன்றும் பெரியரிடப்பட்டுள்ளது.
இடதுசாரி கொள்கையுடைய ஜனாதிபதி சார்க் மாநாட்டின் தலைவராகவும் திகழ்கிறார். முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவை கரம்பிடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்று புதல்வர்கள் உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply