வவுனியா நிவாரண கிராமங்களில் 6 வெளிநாட்டு பிரஜைகள்: சமரசிங்க

இலங்கை யுத்த வலயத்திலிருந்து இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள பொது மக்களுடன் ஆறு வெளிநாட்டு பிரஜைகளும் சிக்கியுள்ளதாகத் அரசாங்கம் கண்டறிந்துள்ளது. மூன்று அவுஸ்திரேலியர்களும், பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் நோர்வே நாடுகளை சேர்ந்த தலா ஒருவருமாக ஆறு பிரஜைகள் இவ்வாறு நிவாரண கிராமங்களில் தங்கியுள்ளனர்.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு ஆறு வெளிநாட்டுப் பிரஜைகளே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவித்த மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணினார்களா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள பிரித்தானிய பிரஜையான ஞானகுமார் வீசா வழங்கப்பட்ட ஆறு மாத காலத்தைவிட அதிகமாக இலங்கையில் தங்கியிருப்பதாக இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஞானகுமார் வீசா காலத்தை தாண்டி இலங்கையில் தங்கியிருந்ததன் மூலம் இந்நாட்டு குடிவரவுச் சட்டங்களை உதாசீனம் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏனைய ஐந்து வெளிநாட்டு பிரஜைகளின் நிலமை தொடர்பிலும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply