குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை : அஜ்மீர் தர்கா தலைவர் கருத்து

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்கா தலைவர் சைனுல் ஆபிதீன் அலிகான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்த சட்டத்தால் தங்களது குடியுரிமைக்கு ஆபத்து வந்து விடும் என்று அவர்கள் பயப்பட வேண்டாம். அவர்களின் பயத்தை போக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அதிகாரமிக்க குழுவை அமைத்து முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் குறைகளை கேட்டறிந்து சட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply