72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு விசேட குழு: அமைச்சரவை அனுமதி
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரச நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 2020 ஆண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டம் கொழும்பு 07 சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
72 ஆவது சுதந்திர தின விழாவின் நிகழ்ச்சி நிரலை வகுத்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரை தலைவராக கொண்ட குழு ஒன்றை அமைப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply