அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம் நாளை முதல் குறைப்பு

பயணிகள் போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலாசனைக்கு அமைய நாளை 23 தொடக்கம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறை தொடக்கம் நீர்கொழும்பு வரையிலும் காலி தொடக்கம் நீர்கொழும்பு வரையிலும் சேவையில் ஈடுபடும் பஸ்களின் பஸ் கட்டணம் குறைக்கப்படவுள்ளது.

இதற்கு அமைவாக நீர்கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையில் அறவிடப்பட்ட 720 ரூபா அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம் 700 ரூபாவாக குறைக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு தொடக்கம் காலி வரையிலான அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணம் 630 ரூபாவில் இருந்து 600 ரூபாவாக குறைக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply