பூமியில் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட தூரம் இதுதான்

உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக நடைபயண யாத்திரை செல்கிறார்கள். நாகரீகம் வளர்ச்சியடைவதற்கு முன்னால் மனிதன் அனைத்து இடங்களுக்கும் நடைபயணமாகவே சென்றான். பின்னர் விலங்குகளை பயன்படுத்தி தான் நினைத்த இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தான். அதன் பின்னர் பிற தேசங்களுக்கு செல்ல கடற்பயணம் மேற்கொண்டான்.

நாகரீகம் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலத்தில், வாகனங்களின் பயன்பாடு அதிகம் உள்ளதால் கடைத்தெருவிற்குகூட காரில் செல்லும் நபர்களும் உள்ளனர் எனலாம். அந்த அளவிற்கு போக்குவரத்து துறையில் உலகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில், பூமியில் மிக நீண்ட தூரம் நடந்து செல்லக்கூடிய ஒற்றை தூரம் எவ்வளவு என்பதை கூகுள் மேப் மூலம் கணித்து சுவாரசியமான பொறியியல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தென் ஆப்பிரிக்க நாட்டின் கடலோர கிராமமான எல் அகுல்ஹாசில் இருந்து வடக்கு ரஷியாவின் மகடான் நகர் வரை உள்ள தூரமே மனிதன் அதிகபட்சமாக நடந்து செல்லக்கூடியதாகும். மொத்தம் 14 ஆயிரம் மைல்கள் உடைய இந்த தூரத்தை கடக்க 3 ஆண்டுகள் ஆகும். இந்த பயணத்தின் போது எந்த நிலையிலும் ஒரு ஆற்றின் குறுக்கே செல்ல ஒரு சிறிய படகையும் கூட நாம் பயன்படுத்த வேண்டியதில்லை, ஏனென்றால் முழு வழியும் பாலங்களைக் கொண்ட சாலைகளால் ஆனது.

இந்த பயணத்தின்போது பருவ நிலைகளுக்கு ஏற்றவாறு, உயிர் பிழைப்பதற்கான பாதுகாப்பு உபகரணங்களை எடுத்து செல்ல வேண்டும் என்பது மிக முக்கியமானதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply