அமெரிக்காவில் பனிமூட்டம் காரணமாக 60 கார்கள் மோதி கோர விபத்து

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் வில்லியம்ஸ்பர்க் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இப்படி அடுத்தடுத்து 60-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. எனினும் அதிர்‌‌ஷ்டவசமாக இந்த கோர விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால் 50-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். 

இந்த விபத்தை தொடர்ந்து நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து கார்களுக்குள் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய கார்கள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பின்னர் நெடுஞ்சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply