இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமருடன் ரணில் பேசுவார்
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரைத் தாம் சந்தித்துப் பேசவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவுக்கு தற்போது விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, புதுடில்லியில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர்,வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேசுவதற்காக நேரம் ஒதுக்கிக் கேட்டுள்ளேன்.
தற்போதுள்ள சூழ் நிலையில் இலங்கையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. பேச்சுவார்த்தை மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்பதே எனதும் எனது கட்சியினதும் விருப்பமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply