தெற்கு போதைப் பொருள் வர்த்தகர்களுடன் புலிகள் நீண்ட கால உறவு
புலிகளின் புலனாய்வுதுறைப் பொறுப்பாளர் பொட்டம்மானின் ஆலோசனையின் பேரில் தாக்குதல்களை நடத்தும் நோக்கில் கடந்த காலங்களில் தென்பகுதிக்கு சென்ற புலிகளின் உறுப்பினர்கள், தெற்கில் உள்ள போதைப் பொருள் வர்த்தகர்களின் பாதுகாப்பில் மறைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
புலிகளுக்கும் இந்த போதைப் பொருள் வர்த்தகர்களுக்கும் இடையில் காணப்பட்ட நீண்டகால தொடர்புகளின் அடிப்படையில் தென் பகுதிகளுக்கு சென்று நிலைக் கொண்டிருந்த, புலிகளின் உறுப்பினர்கள், அந்த அமைப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து, அவர்கள் போதைப் பொருள் வர்த்தகர்களிடம் பாதுகாப்பை பெறச் சென்றுள்ளதாக புலனாய்வு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகர்களிடம் பாதுகாப்பை பெற்றுள்ள, புலிகளின் உறுப்பினர்கள், அந்த வர்த்தகரின் தேவைகளுக்கு அமைய பாதாள உலகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். தற்போது காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தென் பகுதிகளில் மறைந்துள்ள புலிகள் குறித்த முக்கிய தகவல்கள் பல வெளியாகி உள்ளதாகவும் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் மன்னார் கடல் பகுதி ஊடாக தென்பகுதிக்கு போதைப் பொருளை கடத்தி சென்ற கடத்தல்காரர்கள், புலிகளுக்கு பெரும் தொகை கப்பம் செலுத்தி வந்ததாகவும் இந்த பணத்தையே தெற்கில் தாக்குதல் நடத்த செல்லும் புலிகளின் உறுப்பினர்கள் தமது அன்றாட செலவினங்களுக்கு பயன்படுத்தி வந்தாகவும் கைதுசெய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply