ராஜித்தவை இதுவரை கைது செய்யவில்லை : சட்டமா அதிபர் திணைக்களம்

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜர் படுத்தப்பட்ட போது மூன்றாவது சந்தேக நபர் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதன் போதே ராஜித்த சேனாரத்னவை இதுவரை கைது செய்யவில்லை என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன நேற்று (26) மாலை நாரஹேன்பிட லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குறித்த வைத்தியசாலைக்கு சென்று ராஜித்த சேனாரத்னவிடம் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வௌ்னை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 24 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply