அரசியல் தீர்வு குறித்து ஜனாதிபதியுடன் பேசத் தமிழ்க் கூட்டமைப்புத் தயார்; காலம் கடந்த அரசியல் ஞானம் : கடுங்கோபத்தில் முகாம் மக்கள்
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசுவதற்குத் தயாராகவிருக் கிறது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. பல விடயங்கள் தொடர்பாகக் கலந்து ஆலோசிப்பதற்காக இம்மாதம் (ஜூன் 9) ஒன்பதாம் திகதி நாடாளுமன்றக் குழு அறையில் ஒன்றுகூடும் கூட்டமைப்பு மேற்படி விடயத்தை மிகத் தீவிரமாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவொன்றை எடுக்கும் என்று அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
தமிழர்கள் தமது உரிமையைப் பெறுவதற்காக 60 வருடங்களாகப் போராட்டம் நடத்தினர். 30 வருடங்கள் அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போராட்டம் தோற்றுப் போனதால் ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது. ஆயுதப் போராட்டமும் முப்பது வருடங்கள் மேற்கொள்ளப் பட்டன. இறுதியில் அதுவும் தோற்றுப் போனது.
யுத்தம் முடிவுற்றாலும் பொருத்தமான அரசியல் தீர்வின் ஊடாகவே தமிழ்பேசும் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். நல்லதொரு அரசியல் தீர்வை தமிழ் பேசும் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் நாம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றோம். இது தொடர்பாக ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவும் தயாராகவுள்ளோம்.
ஜனாதிபதி நம்மை முதலில் பேச்சுக்கு அழைத்தபோது நாம் அந்த அழைப்பை நிராகரித்தோம். யுத்தத்தை நிறுத்தி சாதாரண நிலையை ஏற்படுத்தினால் மாத்திரமே நாம் பேச்சுக்கு வருவோம் என்று ஜனாதிபதியிடம் கூறினோம். ஆனால், இப்போது யுத்தம் முடிவடைந்துள்ளது. அதன் காரணத்தால் நாம் ஜனாதிபதியைச் சந்தித்து அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசத் தயாராகவிருக்கின்றோம்.
ஜனாதிபதி மீது சிங்கள மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அவர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவது தொடர்பில் எந்தவித எதிர்ப்பையும் தெற்கில் எதிர்கொள்ள மாட்டாரென அக்கட்சி தெரிவித்துள்ளது.
மேற்படி கூட்டமைப்பின் கருத்து குறித்து வவுனியா நலன்புரி முகாம்களில் வசிக்கும் மக்கள் சிலரிடம் கருத்து கேட்ட போது,`புலிகள் உலக நாடுகள் அனைத்தும் கேட்டும் சொல்வழி கேளாமல் யுத்தத்தை தொடங்கி தோல்வியின் விளிம்பில் நின்று இறுதி நாட்களில் `சமாதனம்` என்று வாய்கிழியக் கத்தியும் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. புலிகளைக் போலத்தான் கூட்டமைப்பும் மக்கள் யுத்தத்தில் சிக்கி சின்னாபின்னமான போது வாய்திறக்காமல் இருந்துவிட்டு இப்போ அரசியல் தீர்வுவென கதையளந்து முகாம்களில் இருக்கும் மூன்று லட்சம் மக்களின் பெருமூச்சில் அரசியல் செய்யும் மகா அற்பர்கள். இவர்களின் தமிழ் இனவாத பீடை அரசியல் ஒழிந்தால்தான் முகாம்களில் இருக்கும் எமக்கும் விடுதலை, மீதித் தமிழ் மக்களுக்கும் நிம்மதி` எனக் கடுங்கோபத்துடன் பதில் அளித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply