உருகுவே நாட்டில் ரூ.7,000 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

உருகுவே நாட்டில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த நாட்டின் கடற்படை அதிகாரிகளும், சுங்க அதிகாரிகளும் துறைமுக நகரான மொண்டேவீடியோ நகர துறைமுகத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் காட்சி அளித்த சோயா மாவு டப்பாக்களை திறந்து பார்த்தபோது, அவற்றுக்குள் 4.4 டன் எடை கொண்ட கொகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த போதைப்பொருட்கள் மேற்கு ஆப்பிரிக்க நாடான டோகோவின் தலைநகரான லோமுக்கு கடத்த இருந்தது தெரிய வந்தது. அவற்றை கடற்படை அதிகாரிகளும், சுங்க அதிகாரிகளும் பறிமுதல் செய்தனர். இது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7,000 கோடி) என தகவல்கள் கூறுகின்றன.

லத்தீன் அமெரிக்காவில் இருந்து போதைப்பொருட்களை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்துவதற்கு உருகுவேதான் மையமாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்பு உருகுவே நாட்டில் கடந்த நவம்பர் மாதம் இதே மொண்டேவீடியோ நகரில் 3 டன் கொகைன் போதைப்பொருள் கடத்தலை தடுத்து, பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply