சோமாலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. சபை பொது செயலாளர் கண்டனம்
சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.அப்பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட டிரக்கை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்ததில் 90 பேர் பலியாகினர்.
இந்நிலையில், சோமாலியாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐநா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மொகடிஷூவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ர்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூர தாக்குதலை நடத்தியவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
மேலும், சோமாலியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க ஐ.நா. எப்போதும் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply