சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு
சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக சோதனைச் சாவடிகள், ஓட்டல்கள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து தாக்குதகள் நடத்தப்படுகின்றன. இதில் அப்பாவி மக்கள் பலர் பலியாகி உள்ளனர்.
இதற்கிடையே, சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.
வரி செலுத்துவதற்காக ஏராளமானோர் வரிசையில் நின்றபோது, அப்பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்ட டிரக்கை பயங்கரவாதிகள் திடீரென வெடிக்கச் செய்தனர்.
இந்த கோர தாக்குதலில் 61 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
காயமடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மொகடிஷூவில் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல் இது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply