புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவில் வேலைசெய்த நோர்வே பிரஜைகள் மூவர் வன்னியில் உள்ள நலன்புரி முகாமில் கைது

புலிகளின் சர்வதேச உளவுப்பிரிவில் நோர்வே கிளையில் வேலைசெய்த ஆனந்தராஜா, விவேகானந்தன், சாமி ஆகிய மூவர் வன்னியில் உள்ள நலன்புரி முகாம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளர். இவர்கள் நோர்வேயில் உள்ள புலிகளின் வலையமைப்பின் பிரதிநிதிகள் எனவும் இவர்களே முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்தில் இருந்து நோர்வே அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்கியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மூவரை மீட்டெடுத்து தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்களின் பெற்றோர் நோர்வே அதிகாரிகளிடம் விடுத்துள்ள கோரிக்கையை அடுத்தே, இவர்கள் குறித்து தெரியவந்துள்ளது. அதேவேளை நோர்வே பிரஜா உரிமையை பெற்ற மேலும் மூன்று பெண்கள் நலன்புரி முகாம்களில் இருப்பதாக நோர்வே தரப்பினரால் இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply