இனப்பகைமைகளை வளர்க்கும் செய்திகள் வெளியிடுவதை தவிருங்கள்

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகை யில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டுமென்றும் பகைமையையும், குரோதத்தையும் வளர்க்கும் விதத்தில் செயற்பட கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமை யாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சமூகத்தில் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் எதனையும் எழுதவோ, ஒலிபரப்பவோ வேண்டாமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.சிறிய ஒரு சம்பவம் கூட ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நிதானமாக செய்திகளை வெளியிட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராம ங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதே நேரம், மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்தவென 180 நாள் வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply