புலிகள் வழங்கிய காணி அதிகாரங்கள் செல்லுபடியற்றவை

வன்னியில் புலிகளின் நிர்வாக காலத்தில் வழங்கப்பட்டுள்ள காணிகளை மீள சுவீகரித்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். புலிகளினால் வழங்கப்பட்ட காணி அதிகாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பொருளாதார ரீதியாக பெறுமதி வாய்ந்த காணிகளை புலிகள் சட்டவிரோதமாக கைப்பற்றி தமது உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

புலிகளின் இராணுவ முகாம்கள், பயிற்சி முகாம்கள், கடற்படைத் தளங்கள், விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள் மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள் என்பனவற்றையும் அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply