மெக்சிகோவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிமலை
எரிமலை (Volcano) என்பது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் அமைந்துள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். எரிமலை ஆங்கிலத்தில் “வால்கனோ” (volcano) என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வால்கன் என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும்.
பொதுவாக பூமிக்கடியில் உள்ள மாக்மா எனப்படும் உருகிய பாறை மேற்பரப்புக்கு உயரும்போது எரிமலைகள் வெடிக்கும். மாக்மா தடிமனாக இருந்தால், வாயு குமிழ்கள் எளிதில் வெளியேற முடியாது, மாக்மா உயரும்போது அழுத்தம் அதிகரிப்பதால் வெடித்துச் சிதறுகின்றன. கடந்த மாதம் நியூசிலாந்து நாட்டின் வெள்ளைத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள போபோகாட்பெட் எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ளது அமெகெமீகா மற்றும் சான் பெட்ரா நக்சபா நகரங்கள். இந்நகரங்களில் இருந்து சற்று தொலைவில் உள்ளது போபோகாட்பெட் எரிமலை. இந்த எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிமலை குழம்பை கக்கியது.
எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட கரும் புகை சுமார் 3 கி.மீ தொலைவிற்கு சூழ்ந்தது. இதையடுத்து அந்நகரங்களில் உள்ள மக்களுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கையான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply