ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்
ஓமன் நாட்டை ஆட்சி செய்து வந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் (வயது 79), இவர் 1970-ம் ஆண்டு முதல் சுல்தானாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
இந்நிலையில், சுமார் அரை நூற்றாண்டு காலம் ஓமன் நாட்டை ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை.
சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply