தமிழகத்தில் புலிகள் மீது அநுதாபம் இல்லை: சோ
தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு அநுதாபம் இல்லையென அரசியல் விமர்சகரும், துக்ளக் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சோ.இராமசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்பொழுது இலங்கைத் தமிழர்கள் மீது அநுதாபம் ஏற்பட்டிருந்தாலும் தேர்தலுக்கு அப்பால் அது நீடித்திருக்காது எனவும், எனினும், இதனைக் கொண்டு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு சமாதானம் தேவையென்தே முதலாவது கோரிக்கையாக இருப்பதுடன், சிங்களவர்களுக்கு வழங்கப்படும் சமமான உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்படவேண்டுமென்பது தமிழகத்தின் அடுத்த கோரிக்கையாக உள்ளது என சோ இந்திய ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.
“விடுதலைப் புலிகளை நான் பலவாறு விமர்சித்திருந்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிக்கின்றேன். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் தமிழர்களுக்கு மாகாணசபை அரசாங்கம் உறுதிப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்கு சமாமான உரிமைகள் வழங்கப்பட்டு சமாதானமான சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்கள் வாழமுடியும், எனினும், துரதிஸ்டவசமாக விடுதலைப் புலிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை பாழடித்துவிட்டனர் எனக் கூறினார்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் நலன்கருதிச் செயற்படாவிட்டாலும் தாமே தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக இருக்கவேண்டும் என்பதற்காக ஏனைய தமிழர்களின் பிரதிநிதிகளையும், அரசியல் தலைவர்களையும் புலிகள் ஒழித்துவிட்டனர் என இராமசாமி கூறினார்.
இந்த நிலையில் விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்டால் எந்தத் தலைவர்களும் இல்லாத நிலையில் கைவிடப்பட்டுவிடுவார்கள் என்பதால் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா தலையிட்டு, ராஜீவ்காந்திக்கும்-ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அமுல்படுத்த அழுத்தம் கொடுக்கவேண்டும் என சோ.இராமசாமி அந்த ஊடகத்திடம் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply