தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பை ஆனந்தசங்கரி நிராகரிப்பு
இலங்கையில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ளதன் பின்புலத்தில், அது தொடர்பிலும் மேலும் பல விடயங்களிலும் இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தம்மை சந்தித்து உரையாடியதை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி பி.பி.சி. தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால், இணைந்து செயல்படும் வகையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை தாம் நிராகரித்து விட்டதாகவும், தற்போது அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று தாங்கள் கருதுவதாகவும் ஆனந்தசங்கரி கூறுகிறார்.
கிளிநொச்சி அரச படைகளால் மீட்கப்படும் நிலையில் கூட தாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம், விடுதலைப் புலிகள் மீது அழுத்தத்தை கொடுத்து மக்களை விடுவிக்கச் செய்யுமாறு கோரியதாகவும், அப்போது அவர்கள் செவிமடுத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதையும், உடமைகளை இழப்பதையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியிம் எனவும் அவர் கருத்து வெளியிடுகிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply