புலி ஆதரவாளர்களுக்கு இந்திய வீசா வழங்கக் கூடாது
இறைமையும் ஆட்புல ஒருமைப்பாடும் கொண்ட ஒரு ஜனநாயக நாடு என்ற ரீதியில் அரசுக்கு எதிரான கருத்துக்களை இலங்கை பிரஜைகள் அந்த நாட்டில் இருந்து கொண்டே வெளியிட வேண்டும். புலிகளுக்கு ஆதரவான வகையில் இந்திய மண்ணில் பிரச்சாரம் செய்யும் இலங்கைப் பிரஜைகளுக்கும் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் மத்திய அரசு வீசா அனுமதி வழங்ககக் கூடாது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய மண்ணில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் அனுமதியளிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடொன்றில் இந்தியாவிற்கு எதிரான இந்தியர்கள் பிரச்சாரம் செய்வதனை நாம் விரும்புவோமா அவ்வாறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறித்த நாடு இந்தியாவிற்கு எதிராக ராஜதந்திர துரோகம் மேற்கொள்வதாகவே கருதுவோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply