கண்டி வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு பொருட்கள் செல்ல அனுமதி
கொழும்பில் இருந்து யாழ்-கண்டி வீதியூடாக அனைத்து பொருட்களையும் யாழ் குடாநாட்டிற்கு எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் வர்த்தகர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசியதை அடுத்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 11ம் திகதி வர்த்தகர்களுக்கு சொந்தமான 120 லொறிகளில் யாழ்ப்பாணத்திற்கு பொருட்கள் எடுத்து செல்லப்படவுள்ளது.
இந்த பொருட்கள் அனுராதபுரத்தில் லொறிகளும் படையினரால் சோதனையிடப்பட்டு சீல் வைக்கப்படும் பின்னர் முகமாலை பகுதியில் லொறிகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த சீல்கள் விலக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply