Galle Face மைதானம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

Wednesday, November 6th, 2024 at 11:18 (SLT)

காலி முகத்திடல் மைதானத்தை பல்வேறு சமூக நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு

Wednesday, November 6th, 2024 at 11:14 (SLT)

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலன்னறுவையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வர்த்தகர் உயிரிழப்பு

Wednesday, November 6th, 2024 at 11:10 (SLT)

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை, கத்துருவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய வர்த்தகர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு 

Wednesday, November 6th, 2024 at 11:06 (SLT)

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இதேவேளை தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதிக்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சட்டத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாடுகள் தளர்வு

Wednesday, November 6th, 2024 at 11:01 (SLT)

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதுடன், புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இ.தொ.கா சிரேஷ்ட பிரமுகர் கட்சியிலிருந்து விலகல்

Wednesday, November 6th, 2024 at 10:57 (SLT)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் ஏ.பிலிப்குமார் தான் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 37 வருடங்களாக கட்சியின் உறுப்பினராக இருந்த பிலிப்குமார் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராகவும் செயற்பட்டவர்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Wednesday, November 6th, 2024 at 10:48 (SLT)

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை பாதுகாப்புத்துறை அமைச்சரை அதிரடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

Wednesday, November 6th, 2024 at 10:45 (SLT)

இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்ட் அதிரடியாக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காசாமுனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ட்ரம்ப் முன்னிலை

Wednesday, November 6th, 2024 at 10:41 (SLT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

இன்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை

Wednesday, November 6th, 2024 at 10:37 (SLT)

இன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அநுரகுமாரவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளோம் : நாமல்

Tuesday, November 5th, 2024 at 12:48 (SLT)

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.காலி, அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிபட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தாயின் விரல்களை வெட்டிய கொடூர மகன்

Tuesday, November 5th, 2024 at 12:44 (SLT)

நபரொருவர் தனது தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து வெட்டிய அதிர்ச்சியான சம்பவமொன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

உகாண்டாவில் மின்னல் தாக்கி 14 போ் உயிரிழப்பு

Tuesday, November 5th, 2024 at 12:35 (SLT)

உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 போ் உயிரிழந்தனா். 34 போ் காயமடைந்தனா். உகாண்டாவின் லாம்வோ மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

மேலும் வாசிக்க >>>

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்

Tuesday, November 5th, 2024 at 12:31 (SLT)

இந்தோனேசியவில் உள்ள லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில், வீடுகள் எரிந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி லகி லகி என்ற எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறுவதால், அப்பகுதியைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது.

மேலும் வாசிக்க >>>

கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்ட இரு அதிகாரிகளுக்கு பணி இடைநீக்கம்

Tuesday, November 5th, 2024 at 12:27 (SLT)

மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில கைதிகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>