உள்ளூராட்சி சபை அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு

Monday, November 4th, 2024 at 9:51 (SLT)

யாழ்ப்பாணம் நல்லூர் உள்ளுராட்சி சபையின் பணி மேற்பார்வையாளர் நேற்று (03) கோண்டாவில் பகுதியில் உள்ள இடமொன்றில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலத்தில் வெளிப்புற காயங்களோ, இரத்தக் கசிவோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் தாக்குதல் ; வேட்பாளர் உட்பட 3 பேர் படுகாயம்

Monday, November 4th, 2024 at 9:47 (SLT)

மட்டக்களப்பில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது பிள்ளையான் கட்சி ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில் கருணா அம்மானின் கட்சி வேட்பாளர் ஒருவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (3) இரவு ஜெயந்திபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மட்டுதலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது;

மேலும் வாசிக்க >>>

தேர்தல் நிறைவடைந்த பின்னர் வெளிநாடு செல்கிறார் ரணில்

Monday, November 4th, 2024 at 9:41 (SLT)

இம்மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நிறைவடைந்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விடுமுறைக்காக தான் வெளிநாட்டுக்கு பயணிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நானுஓயாவில் முச்சக்கரவண்டி விபத்து : ஐவர் படுகாயம்

Monday, November 4th, 2024 at 9:38 (SLT)

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிளாசோ ஆலயத்துக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். நானுஓயா உடரதல்ல பகுதியில் இருந்து நானுஓயா நகருக்கு பயணித்த முச்சக்கரவண்டியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மண் மேட்டில் மோதுண்டதையடுத்து முச்சக்கரவண்டி வீதியோரம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் வாசிக்க >>>

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் : நிமல்கா பெர்ணான்டோ

Monday, November 4th, 2024 at 9:35 (SLT)

அரச நிர்வாகம் தொடர்பில் எந்த அனுபவமும் இல்லாத பிரதமர் ஹரிணி, சிரேஷ்ட அரசியல் தலைவரான ரணில் விக்ரமசிங்க சொல்லவந்த விடயத்தை புரிந்துகொள்ளாமல் அவரை விமர்சித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். அரச நிர்வாக நடைமுறை தொடர்பில் அவருக்கு ரணில் விக்ரமசிங்கவிடம் கற்றுக்கொள்ள முடியாது என்றால் ஜனாதிபதி அநுரகுமாரவிடமாவது கற்றுக்கொண்டு பதிலளிக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் நிமல்கா பெர்ணான்டோ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இப்படியே போனால் KDU பஸ் போன்று ஆகிவிடும்:ரணில் விக்ரமசிங்க

Sunday, November 3rd, 2024 at 10:35 (SLT)

பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு தலிபான்கள் பிறப்பித்த புதிய உத்தரவு: சத்தமாக தொழுவது தடை

Sunday, November 3rd, 2024 at 10:27 (SLT)

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி வந்த பின்னர் பெண்களுக்கு எதிராக கடுமையான பல விதிமுறைகள் உருவாக்கப்பட்ட நிலையில், பெண்கள் முன்னிலையில் ஒரு பெண் சத்தமாக தொழுவது தடை செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தலிபான் அமைச்சர் ஒருவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

மேலும் வாசிக்க >>>

நிலைய அதிபர்கள் சங்கம் அறிவிப்பு

Sunday, November 3rd, 2024 at 10:23 (SLT)

மீண்டும் நாளை மறுதினம் முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் அண்மையில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

மேலும் வாசிக்க >>>

துன்ஹிந்த பேருந்து விபத்து: உயிரிழந்த மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று

Sunday, November 3rd, 2024 at 10:20 (SLT)

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் துன்ஹிந்த பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (03) இடம்பெறவுள்ளன. இவர்களின் இறுதிக் கிரியைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பூரண அனுசரணையுடன் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கடவுச்சீட்டு தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும்: திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Sunday, November 3rd, 2024 at 10:17 (SLT)

கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 50,000 ‘பி’ தொடர் வெற்று கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றுள்ளது. மேலும் 750,000 வெற்று கடவுச்சீட்டுகளை உரிய காலத்தில் திணைக்களம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அடுத்த 10 வருடங்களில் குடும்பமொன்று கார் ஒன்றை உரித்தாகக் கொண்டிருக்கும் வகையில் பொருளாதாரம் உயர்த்தப்படும் : நளின் ஹேவகே

Sunday, November 3rd, 2024 at 10:14 (SLT)

அடுத்த பத்து வருடங்களில் குடும்பமொன்று கார் ஒன்றுக்கான உரித்தினை கொண்டிருக்கும் வகையில் பொருளாதாரம் உயர்த்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : சந்தேக நபர் கைது

Sunday, November 3rd, 2024 at 10:09 (SLT)

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை , பொலொஸ்ஸகம பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜே.வி.பிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளிப்பு

Sunday, November 3rd, 2024 at 10:06 (SLT)

ஜே.வி.பி.யின் அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் நிராகரிப்புக்கு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமான நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் பதிலளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளதால் நாகை இலங்கை கப்பல் சேவை: வாரத்துக்கு 5 நாட்களாக அதிகரிப்பு

Sunday, November 3rd, 2024 at 10:01 (SLT)

நாகப்பட்டினம்: இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால், நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல்இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 8-ம் தேதி முதல்வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Sunday, November 3rd, 2024 at 9:57 (SLT)

நாட்டில் இன்று பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>