வாக்காளர் அட்டை விநியோகிக்கும் விசேட தினம் இன்று

Sunday, November 3rd, 2024 at 9:54 (SLT)

இலங்கையின் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (03) கருதப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இடம்பெறும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்ற மகிந்த

Saturday, November 2nd, 2024 at 13:14 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெறலாம் : ஈ.பி.டி.பியினர்

Saturday, November 2nd, 2024 at 13:10 (SLT)

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் மூன்று தமிழ் பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் யாருடைய வாக்குகளையும் சிதறடித்து வாக்குகளை பெற வேண்டிய தேவை எமக்கில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அநுர அரசில் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி : உதய கம்மன்பில

Saturday, November 2nd, 2024 at 13:03 (SLT)

இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத்தேர்தலின் பின்னர் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும். எம். ஏ. சுமந்திரனுக்கு வெளிவிவகாரத்துறை அமைச்சு பதவியை வழங்கவும், சமஷ்டியாட்சி முறைமையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஜனாதிபதி தமிழ் தரப்புக்கு உத்தரவாதமளித்துள்ளார். நாட்டுக்கு எதிராக இச்செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியுமா? என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

கால்வாயில் இருந்து சடலம் மீட்பு

Saturday, November 2nd, 2024 at 12:56 (SLT)

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தண்ணீர் தாங்கிக்கு, தண்ணீர் கொண்டு செல்லும் நீர் போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு வலையில் இருந்து, இன்று (2) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு உள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி – இந்திய தூதுவர் சந்திப்பு

Saturday, November 2nd, 2024 at 12:52 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவான மீளாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன், அந்தத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Saturday, November 2nd, 2024 at 12:46 (SLT)

கொழும்பு , முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வல சந்திக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளதாக முகத்துவாரம் பொலிஸார் தெரிவித்தனர். முகத்துவாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளார்.கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

Saturday, November 2nd, 2024 at 12:42 (SLT)

பதிவுசெய்யப்பட்ட இலக்கத்தகடு இல்லாத சொகுசு கார் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,

மேலும் வாசிக்க >>>

அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்

Saturday, November 2nd, 2024 at 12:39 (SLT)

நிறுவனங்களில் புதிய நியமனங்கள் மற்றும் பணி இடமாற்றங்களை செய்வதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,

மேலும் வாசிக்க >>>

அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் விபத்து : இளைஞன் பலி

Saturday, November 2nd, 2024 at 12:34 (SLT)

அம்பாறை – அக்கரைப்பற்று வீதியில் 15ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக எரகம பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது. செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்து எதிர்த்திசையில் பயணித்த கெப் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கல்கிஸ்ஸையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Saturday, November 2nd, 2024 at 12:28 (SLT)

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட படோவிட்ட பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

Saturday, November 2nd, 2024 at 12:24 (SLT)

நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் : ப.உதயராசா

Saturday, November 2nd, 2024 at 10:23 (SLT)

வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும்: ஜனநாய தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ப.உதயராசா வன்னியை ஊழலற்ற தேர்தல் தொகுதியாக மாற்றிக் காட்டுவதற்கு மக்கள் ஆணை வழங்க வேண்டும் என ஜனநாய தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் ப.உதயராசா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறிய ரணில் : பொலிஸில் முறைப்பாடு

Friday, November 1st, 2024 at 12:27 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேர்தல் செலவின சட்டத்தின் பிரகாரம் செயற்படத் தவறியுள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைத்து நேற்று (31) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்கான பிரஜைகளின் அமைப்பால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இனச்சுத்திகரிப்பின் 34 ஆவது வருட நினைவு கூறல்

Friday, November 1st, 2024 at 12:23 (SLT)

வடக்கு முஸ்லிம் மக்கள் வெளியேற்றத்தின் 34 ஆவது வருட நினைவு கூறல் நிகழ்வு யாழ்ப்பாணம் முஸ்லிம் கலாசார சபையின் ஏற்பாட்டில் யாழ். ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் கடந்த 30 ஆம் திகதி மாலை நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>