காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலி கொட தொடர்பான விசாரணை ஆரம்பம்

Wednesday, October 30th, 2024 at 13:13 (SLT)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கிரிதல இராணுவ முகாமின் முன்னாள் தளபதி ஷம்மி குமாரரத்ன மற்றும் ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் நியமிக்கப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணை நேற்று முன்தினம் (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பமானது.

மேலும் வாசிக்க >>>

2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும்: பரீட்சைகள் திணைக்களம்

Wednesday, October 30th, 2024 at 13:11 (SLT)

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபட்ட திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் இணைந்து போட்டி : ச. குகதாசன்

Wednesday, October 30th, 2024 at 7:57 (SLT)

திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் இணைந்து போட்டியிடுகிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சி முதன்மை வேட்பாளர் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த தலைவராக: ஹர்ஷ டி சில்வா?

Wednesday, October 30th, 2024 at 7:50 (SLT)

இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக ஹர்ஷ டி சில்வா பதவி வகிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், தொழிற்சங்க போராட்டம்: நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு

Wednesday, October 30th, 2024 at 7:45 (SLT)

ரயில்வே திணைக்களத்திற்குள் உள்ள நிர்வாக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் அமைச்சரும் தீர்வுகாணாவிட்டால், இன்று புதன்கிழமை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றத் தேர்தல்: 13421 வாக்குச் சாவடிகள்

Wednesday, October 30th, 2024 at 7:41 (SLT)

இலங்கையில் இடம்பெறவுள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 1,71,40,354 வாக்காளர்களுக்காக மொத்தமாக 13,421 வாக்குச்சாவடிகளை தயார்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

2025ஆம் ஆண்டு முதல் அரச சேவைக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் : அமைச்சர் விஜித ஹேரத்

Tuesday, October 29th, 2024 at 13:50 (SLT)

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், கடந்த அரசாங்கம் இந்த விடயத்தில் பணம் உள்ளதா என்பதை கூட அவதானிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை : அமைச்சர் விஜித ஹேரத்

Tuesday, October 29th, 2024 at 13:47 (SLT)

புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேபோல், தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொதுஜன பெரமுன உறுப்பினர் படுகொலை

Tuesday, October 29th, 2024 at 13:45 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கேகாலை, கொஸ்ஸின்னவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

இங்கிலாந்தில் இருந்து கள்ளத்தனமாக கொண்டுவந்த, திருட்டு வாகனங்கள் அம்பலம்

Tuesday, October 29th, 2024 at 13:43 (SLT)

அரசியலை மக்கள் சேவையாக மாற்றியமைத்திட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு

Tuesday, October 29th, 2024 at 8:42 (SLT)

அஹுங்கல்ல மற்றும் பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நேற்று (28) பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தொடரும் நாட்டு அரிசி தட்டுப்பாடு: அசௌகரியத்தில் நுகர்வோர்

Tuesday, October 29th, 2024 at 8:35 (SLT)

நாடளாவிய ரீதியில் நாட்டு அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன் சில விற்பனையாளர்கள் நாட்டு அரிசியுடன் கீரி சம்பா அரிசியை விலைக்கு வாங்குமாறு கூறுவதால் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

25 ஆண்டுகளுக்குள் நீர் நெருக்கடி: ஏற்படும் அபாயம்

Tuesday, October 29th, 2024 at 8:28 (SLT)

நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கை எடுக்காவிடின், நன்னீர் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் அழிவை முடிவுக்குக் கொண்டுவராவிடின் எதிர்வரும் 25 ஆண்டுகளுக்குள் நீர் நெருக்கடியை பூமி எதிர்கொள்ளும் என உலகளாவிய நீர் பொருளாதார ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

மேலும் வாசிக்க >>>

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் : அநுர குமார திசாநாயக்க

Monday, October 28th, 2024 at 13:30 (SLT)

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கெளரவமான பொதுச் சேவைக்காக திலித் வழங்கிய உறுதிமொழி

Monday, October 28th, 2024 at 13:27 (SLT)

கௌரவமான பொது சேவையை உருவாக்குவதற்கு தானும் தனது குழுவினரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சர்வஜன அதிகாரத்தில் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். துணிச்சலான எதிர்க்கட்சியை உருவாக்கி இதற்காக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>