இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 இந்திய மீனவர்கள் கைது

Thursday, October 24th, 2024 at 10:43 (SLT)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ். நெடுந்தீவு கடற்பரப்பினுள் புதன்கிழமை (23) இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 16 கடற்தொழிலாளர்களையும் கைது செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்க தூதகரத்தின் எச்சரிக்கை: பாதுகாப்பை பலப்படுத்திய இலங்கை

Thursday, October 24th, 2024 at 7:54 (SLT)

அறுகம்பேவில் உள்ள சுற்றுலாத் தளங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கொழும்பு உட்பட நாட்டில் பிரபல்யமான சுற்றுலாத் தளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: விசாரணை ஆணைக்குழு தொடர்பில் ரணில் விசேட உரை

Thursday, October 24th, 2024 at 7:51 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை ஆராய நியமிக்கப்பட்ட இரு விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு

Thursday, October 24th, 2024 at 7:48 (SLT)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

களனி பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு: விசாரணையில் வெளியான தகவல்

Wednesday, October 23rd, 2024 at 20:37 (SLT)

களனி பல்கலைக்கழக விடுதி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இன்று (23) கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

துருக்கி அங்காராவில் பயங்கரவாத தாக்குதல்: பலர் உயிரிழந்திருக்கலாம்

Wednesday, October 23rd, 2024 at 20:32 (SLT)

துருக்கியில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்காராவிற்கு அருகில் உள்ள துருக்கிய ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (TAI) மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் இருந்து இஸ்ரேலிய பிரஜைகளை வௌியேறுமாறு உத்தரவு

Wednesday, October 23rd, 2024 at 20:25 (SLT)

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற வாய்ப்பு உள்ளதன் காரணமாக, சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.


சம்பளத்தை அதிகரிக்க முடியாவிட்டால், ஒதுக்கப்பட்ட பணத்திற்கு நடந்தது என்ன? : ரணில் விக்ரமசிங்க

Wednesday, October 23rd, 2024 at 20:21 (SLT)

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தாம் எடுத்த சட்ட ரீதியான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (23) நடைபெற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

Wednesday, October 23rd, 2024 at 20:18 (SLT)

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர தர ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட தமக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பதிவு செய்யப்படாத BMW கார் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (23) காலை CIDக்கு வந்திருந்தார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் தொலைபேசியை திருத்த கொடுத்த யுவதிக்கு நேர்ந்த கதி

Wednesday, October 23rd, 2024 at 11:55 (SLT)

முல்லைத்தீவில் தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ள நிலையில் அவருக்கு இளைஞனொருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றில் யுவதி ஒருவர் தனது தொலைபேசியினை திருத்துவதற்காக கொடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு

Wednesday, October 23rd, 2024 at 11:50 (SLT)

இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தாக்குதல் நடத்தப்படலாம் கொழும்பு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

Wednesday, October 23rd, 2024 at 11:48 (SLT)

அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் என தனது பிரஜைகளுக்கு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜொன்ஸ்டன் சிஐடியில் முன்னிலை

Wednesday, October 23rd, 2024 at 10:39 (SLT)

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Wednesday, October 23rd, 2024 at 10:36 (SLT)

மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்து விழுந்து களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். C.W.W கன்னங்கர மாணவர் விடுதியின் மேல் தளத்தில் இருந்தே குறித்த மாணவன் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


புதிய அரசியல் சக்தியின் தேவை வந்துள்ளது:திலித் ஜயவீர

Wednesday, October 23rd, 2024 at 10:33 (SLT)

இந்த நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளின் அரசியல் சர்வஜன அதிகாரத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>