மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

Tuesday, November 19th, 2024 at 13:04 (SLT)

மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,மன்னார் தள்ளாடி சந்திக்கு அருகில் வைத்து, மன்னார் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உத்தியோகத் தர்களால் கேரள கஞ்சா பொதியுடன் நேற்று (18) இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசியப் பட்டியல் விவகாரத்தில் கடும் குழப்பம் – ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Tuesday, November 19th, 2024 at 13:00 (SLT)

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசிய மக்கள் சக்தியின் 43 உறுப்பினர்கள்: எதிர்க்கட்சி இருக்கைகளில்

Tuesday, November 19th, 2024 at 7:34 (SLT)

தேசிய மக்கள் சக்தியில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் 159 பேருக்கு நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியில் இருக்கைகளை வழங்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இன்று 100 மில்லி மீற்றர் வரை பெய்யலாம்

Tuesday, November 19th, 2024 at 7:29 (SLT)

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

Tuesday, November 19th, 2024 at 7:25 (SLT)

ஏ 35 பிரதான வீதியில் தர்மபுரம் பொலிஸ் நிலையம் முன்பாக. இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விசுவமடு பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

17 வது பிரதமராக கடமைகளை ஆரம்பித்த ஹரினி

Monday, November 18th, 2024 at 23:02 (SLT)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17வது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் (18) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வந்து தனது கடமைகளை ஆரம்பித்தார்.


நமது வெற்றி எவ்வளவு பெரியதோ, அதே போல பொறுப்பின் எடை அதே அளவானது : ஜனாதிபதி

Monday, November 18th, 2024 at 22:51 (SLT)

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார் .எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியினால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதே அளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும் வாசிக்க >>>

ஶ்ரீலங்கன் விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு

Monday, November 18th, 2024 at 11:00 (SLT)

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் இலங்கை விமானங்கள் சிலவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிப்பு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

Monday, November 18th, 2024 at 10:55 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு 

Monday, November 18th, 2024 at 10:50 (SLT)

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமானது.

மேலும் வாசிக்க >>>

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

Monday, November 18th, 2024 at 10:39 (SLT)

இன்றையதினமும் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Sunday, November 17th, 2024 at 13:32 (SLT)

10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Sunday, November 17th, 2024 at 13:28 (SLT)

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

புதிய அமைச்சர்கள் நாளை பதவிப்பிரமாணம்

Sunday, November 17th, 2024 at 12:00 (SLT)

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் நாளை (18) காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனிதக் கழிவுகளை வீச முற்பட்டவரை நையப்புடைத்த இளைஞர்கள்

Sunday, November 17th, 2024 at 11:55 (SLT)

வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனிதக் கழிவுகளை வீச முற்பட்ட நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>