சுமார் 50 துப்பாக்கிகள் மீள ஒப்படைப்பு

Monday, October 21st, 2024 at 10:44 (SLT)

சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை தற்காலிகமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணை : அநுர குமார திசாநாயக்க

Monday, October 21st, 2024 at 10:40 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முறையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

Monday, October 21st, 2024 at 10:36 (SLT)

போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணம் பெற்று மோசடி செய்யும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் 09 டிப்போக்களுக்கு போலியான தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த டிப்போக்களின் முகாமையாளர், சிரேஷ்ட அதிகாரி அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு இடத்தில் திடீர் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

ஒன்றிணைந்து குரல் எழுப்ப முன்னாள் ஜனாதிபதிகள் திட்டம்: சிறப்புரிமை குறைக்கப்படுமா?

Monday, October 21st, 2024 at 6:44 (SLT)

நாட்டில் தற்போது பேசுபொருளாக மாறியிருப்பது முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமை குறித்த சர்ச்சை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன என்ற சமூகப் பேச்சு காரணமாக அரசாங்கம் அவர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தது.

மேலும் வாசிக்க >>>

ஐநா பொதுச் செயலாளர் மீதான இஸ்ரேலின் தடை: ஆதரவு கடிதத்தில் இலங்கையும் கையெழுத்து

Monday, October 21st, 2024 at 6:40 (SLT)

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளதாக ஐநாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கை ஏறாவூரில் ஓரினச்சேர்க்கையால் நடந்துள்ள விபரீதம்

Sunday, October 20th, 2024 at 20:44 (SLT)

ஏறாவூரில் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து அவரை அச்சுறுத்தி கப்பமாக 25 ஆயிரம் ரூபா பணம் கோரிய 21 வயது இளைஞன் ஒருவரை நேற்று (19) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

Sunday, October 20th, 2024 at 20:41 (SLT)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கூளாவடியைச் சேர்ந்த 67 வயதுடைய 3 பிள்ளைகளின் தயாரான வி.விஜயராணி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

மேலும் வாசிக்க >>>

கிணற்றில் குதித்து இளைஞன் மரணம்

Sunday, October 20th, 2024 at 20:38 (SLT)

சாவகச்சேரியில் 22 வயது இளைஞன் விபரீத முடிவெடுத்து மரணம். சாவகச்சேரி கைதடி மேற்கு பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நேசன் கஜமுகன் என்பவர் விபரீத முடிவினால் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் சடலமாக மீட்பு

Sunday, October 20th, 2024 at 20:35 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (20) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

எதுவும் செய்யாத தமிழ் அரசியல்வாதிகளை மக்கள் ஓரம் கட்ட வேண்டும்:வி. மணிவண்ணன்

Sunday, October 20th, 2024 at 7:14 (SLT)

தமிழ் மக்களை ஏமாற்றாத ஒரே அணி, எமது தமிழ் மக்கள் கூட்டணி தான் என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் விபத்து பெண் உயிரிழப்பு

Sunday, October 20th, 2024 at 7:10 (SLT)

யாழ்ப்பாணம்-கட்டபிராய் பகுதியில் நேற்று (19) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண்ணின் மீது மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ட்ரம்ப் மீதான தாக்குதல்: வெளியான எச்சரிக்கை அறிக்கை

Sunday, October 20th, 2024 at 7:06 (SLT)

அமெரிக்க புலனாய்வு சேவையில் ஆழமான குறைபாடுகள் உள்ளன. அவை விரைவாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனினில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்ததைப் போன்ற கொலை முயற்சிகள் மீண்டும் நிகழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சவூதியுடனான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை 100 கோல்களைக் கடந்து அமோக வெற்றி

Sunday, October 20th, 2024 at 7:03 (SLT)

இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (19) இரவு நடைபெற்ற சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் ஏ குழு போட்டியில் சவூதி அரேபியாவை துவம்செய்த இலங்கை 118 – 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றது.

மேலும் வாசிக்க >>>

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

Sunday, October 20th, 2024 at 6:56 (SLT)

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தல் அநுரவுக்கு மனோ விடுத்துள்ள கோரிக்கை

Sunday, October 20th, 2024 at 6:53 (SLT)

மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய காணி உரிமை உத்தரவாதங்களையும், வடக்கு – கிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இருக்கின்ற மேலதிக இராணுவ முகாம்களை மூடல், இவை மூலம் தனியார் காணிகள் விடுவிப்பு ஆகியன அடங்கிய காணி உரிமை உத்தரவாதங்களையும் வழங்கி விட்டு அநுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை மலையகத்திலும், வடக்கு – கிழக்கிலும் கோரலாம்.

மேலும் வாசிக்க >>>