சவூதியுடனான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கை 100 கோல்களைக் கடந்து அமோக வெற்றி

Sunday, October 20th, 2024 at 7:03 (SLT)

இந்தியாவின் பெங்களூரு, கோரமங்கலம் உள்ளக விளையாட்டரங்கில் சனிக்கிழமை (19) இரவு நடைபெற்ற சவூதி அரேபியாவுக்கு எதிரான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் ஏ குழு போட்டியில் சவூதி அரேபியாவை துவம்செய்த இலங்கை 118 – 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றது.

மேலும் வாசிக்க >>>

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

Sunday, October 20th, 2024 at 6:56 (SLT)

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தல் அநுரவுக்கு மனோ விடுத்துள்ள கோரிக்கை

Sunday, October 20th, 2024 at 6:53 (SLT)

மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய காணி உரிமை உத்தரவாதங்களையும், வடக்கு – கிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இருக்கின்ற மேலதிக இராணுவ முகாம்களை மூடல், இவை மூலம் தனியார் காணிகள் விடுவிப்பு ஆகியன அடங்கிய காணி உரிமை உத்தரவாதங்களையும் வழங்கி விட்டு அநுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை மலையகத்திலும், வடக்கு – கிழக்கிலும் கோரலாம்.

மேலும் வாசிக்க >>>

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Saturday, October 19th, 2024 at 9:08 (SLT)

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதகரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று (18.10.2024) இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழ் சினிமா துறை குறித்து அரசாங்கம் கவனம்

Saturday, October 19th, 2024 at 9:03 (SLT)

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னேறக் கூடிய வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று புத்தசாசனம், மத அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

எமக்குள்ளான அகவயமான முற்போக்கு மாற்றமே உண்மையான மாற்றம் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Saturday, October 19th, 2024 at 8:57 (SLT)

எமக்குள்ளான அகவயமான முற்போக்கு மாற்றமே உண்மையான மாற்றம் என தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், தென்னிலங்கையிலிருந்து அது வருவதில்லை என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது

Saturday, October 19th, 2024 at 8:51 (SLT)

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கட்சியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் வெளியிடப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

எம்மவர்கள் எதிரணி பக்கம் சென்றதால் பலவீனமடைந்தோம் : நாமல் ராஜபக்ஷ

Saturday, October 19th, 2024 at 8:42 (SLT)

ஜனாதிபதித் தேர்தலின் போது எம்முடன் இருந்தவர்கள் எதிரணி பக்கம் சென்றதால் தான் நாங்கள் அரசியலில் பலவீனமடைந்துள்ளார்கள். விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளவே முயற்சிக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் போலி கையொப்பம் வைத்து பெறுமதிமிக்க காணி மோசடி

Friday, October 18th, 2024 at 10:22 (SLT)

ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணியொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ளவர் நாட்டுக்கு வராத காலப்பகுதியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியே இந்தக் காணி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விசாரணை அறிக்கை குழந்தைகள் வைத்து விளையாடும் பொம்மை அல்ல : விஜித ஹேரத்

Friday, October 18th, 2024 at 10:16 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை தேவையான போது வெளிப்படுத்த தயார் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றத் தேர்தல்: 750,000 தபால் மூல விண்ணப்பங்கள்

Friday, October 18th, 2024 at 10:11 (SLT)

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 7 இலட்சத்து 50 ஆயிரம் தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கை இடம்பெற்றதுடன் தபால் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபாலிடல் பணிகளுக்காக கையளிக்கப்படவுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின்: 108 வாகனங்களை காணவில்லை

Friday, October 18th, 2024 at 9:46 (SLT)

இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான 108 வாகனங்கள் தற்போது அங்கு இல்லை என இலங்கைத் தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் வெளிவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவா?

Friday, October 18th, 2024 at 9:42 (SLT)

சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரயில் மோதி 2 காட்டு யானைகள் பலி ரயில் சேவை தாமதம்

Friday, October 18th, 2024 at 9:37 (SLT)

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. கல்லோயா – ஹிங்குரான்கொடை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்

Friday, October 18th, 2024 at 9:32 (SLT)

ஓக்டோபர் ஏழு தாக்குதலை திட்டமிட்டு முன்னெடுத்த பின்னர் தலைமறைவான யஹ்யா சின்வரை இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஒரு வருடகாலமாக தேடிவந்தது. 61வயதான சின்வர் கடந்த ஒரு வருடகாலமாக காசா பள்ளத்தாக்கின் சுரங்கப்பாதைகளிற்குள்ளேயே வாழ்ந்தார் என கருதப்படுகின்றது.அவரின் பாதுகாப்பிற்கு என மெய்ப்பாதுகாவலர்கள் குழுவொன்று காணப்பட்டது இஸ்ரேலின் பணயக்கைதிகள் அவருடனேயே மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>