ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸில் விமானிகள் மோதல்

Tuesday, October 15th, 2024 at 12:41 (SLT)

2024 செப்டெம்பர் 21 அன்று சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி வந்த யுஎல் 607 விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Tuesday, October 15th, 2024 at 12:34 (SLT)

வெல்லவாய ஹந்தபானாகல வீதியில் ஹந்தபானாகல நீர்த்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று (14) இரவு இரட்டை கெப் வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அதானி குழும காற்றாலை மின் திட்டம் மீள் பரிசீலனைக்கு சட்டமாஅதிபர் நீதிமன்றத்தில் தெரிவிப்பு

Tuesday, October 15th, 2024 at 12:31 (SLT)

மன்னார், விடத்தல்தீவு பகுதியில் அதானி நிறுவனம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை, மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்துக்கு சட்ட மாஅதிபர் தெரிவித்துள்ளார். விடத்தல்தீவில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாகவுள்ள அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்குமிடையிலான ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சட்ட மாஅதிபர் நீதிமன்றத்தில் இதை,அறிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இளைஞனை கொ லை செய்து சடலத்தை உலக முடிவில் வீசிய நபர்

Tuesday, October 15th, 2024 at 12:29 (SLT)

ஹாலி எல ரொசெட் தோட்டத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மடுல்சீம, உலக முடிவு பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று , அவரை தாக்கி கொலை செய்து சடலத்தை உலக முடிவில் இருந்து பள்ளத்திற்கு வீசிய சம்பவம் தொடர்பில் , மடுல்சீம, படாவத்தையை சேர்ந்த 34 வயதுடைய சந்திரபோஸ் தயாளன் என்ற நபர் திங்கட்கிழமை (14) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் வளர்ச்சியை பதிவுசெய்துள்ள கைத்தொழில் உற்பத்தி

Tuesday, October 15th, 2024 at 12:26 (SLT)

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் 1.2 சதவீத வளர்ச்சியைக் காட்டியுள்ளது. 2023 ஓகஸ்டில் 90.2 ஆக இருந்த கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண், இந்த ஆண்டு ஓகஸ்டில் 91.3 ஆக உயர்ந்துள்ளதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சரியான முறையில் வாகன இறக்குமதி : அமைச்சர் இன்று வெளியிட்ட அறிவிப்பு

Tuesday, October 15th, 2024 at 12:23 (SLT)

நாட்டிலுள்ள வெளிநாட்டு கையிருப்புக்கள் தீர்ந்து போகாத வகையில் சரியான முறையில் மாத்திரமே வாகன இறக்குமதி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையுடனான வர்த்தகம்: தீவிரம் காட்டும் பிரித்தானியா

Tuesday, October 15th, 2024 at 7:01 (SLT)

ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் பொறிமுறைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தொடரும் சீரற்ற காலநிலை: பொதுமக்கள் அசௌகரியத்தில்

Tuesday, October 15th, 2024 at 6:56 (SLT)

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பொதுமக்கள் பலர் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளனர். எதிர்வரும் 24 மணி நேரத்திற்குள் தெற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கோட்டா உருவாக்கிய அவன்ட்கார்ட் நிறுவனத்தின் வருமானம்: இலங்கை பெற்ற கடனை விட அதிகம்

Tuesday, October 15th, 2024 at 6:50 (SLT)

2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட கடனுக்கு சமப்பட்ட தொகையை கொள்ளையடிப்பதற்கு நிஸ்ஸங்க சேனாதிபதியின் அவன்ட்கார்ட் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடக்கிலிருந்து ஜனாதிபதிக்கு வந்துள்ள வாக்குறுதி

Monday, October 14th, 2024 at 10:49 (SLT)

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது. சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

கோர விபத்தில் குழந்தை உள்ளிட்ட இருவர் பலி

Monday, October 14th, 2024 at 10:46 (SLT)

கம்பளை நகரில், கம்பளை திசையிலிருந்து நாவலப்பிட்டி திசை நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

சீரற்ற காலநிலை: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியது

Monday, October 14th, 2024 at 10:18 (SLT)

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது. சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மாணவியின் தற்கொலை: கொழும்பு தாமரைக் கோபுரத்தின் பாதுகாப்பு குறைபாடுகளும் காரணமா?

Monday, October 14th, 2024 at 10:14 (SLT)

மனஅழுத்தமா, மனவேதனையா அல்லது நண்பர்களை பிரிந்த துயரமா என பல கேள்விகளை நம் மத்தியில் வைத்துவிட்டு ரத்யா மெத்மலீ குணசேகர, தாமரைக் கோபுரத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகள்: அரசாங்கம் அதிரடி விசாரணைக்கு தயார்

Monday, October 14th, 2024 at 10:10 (SLT)

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்த ‘மத்திய வங்கி பிணைமுறி மோசடி’ , ‘சிரிலிய சவிய’ உள்ளிட்ட பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்றமை தெரிவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் நிதி குற்றங்கள் குறித்து ஆராய புதிய குழுக்கள் : அநுர அரசு திட்டம்

Sunday, October 13th, 2024 at 12:41 (SLT)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நிதி குற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் மூன்று உயர்மட்ட குழுக்களை நியமிக்கவுள்ளது. பொதுத்தேர்தலிற்கு முன்னதாக இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளது.

மேலும் வாசிக்க >>>