97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் 15 ஆம் திகதி ஏலம்

Sunday, October 13th, 2024 at 12:37 (SLT)

97 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.97 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் திருட்டு

Sunday, October 13th, 2024 at 12:35 (SLT)

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் குளியலறை ஊடாக உள்நுழைந்த திருடர்கள், ஆறரை பவுண் நகை மற்றும் 29 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பிற்கு அவசரமாக அழைக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள்

Sunday, October 13th, 2024 at 12:29 (SLT)

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் அனைவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் வேட்பாளர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவு

Sunday, October 13th, 2024 at 12:26 (SLT)

தற்போது நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களின் உறவினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, 424 பேருக்கான ஓய்வூதியம் செலுத்துவதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தமிழரசின் வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டும் : சிறீதரன்

Sunday, October 13th, 2024 at 12:23 (SLT)

“தற்போதைய களச்சூழலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெற்றிக்காக நாங்கள் உழைக்க வேண்டும்.” – என்று அக்கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகமான அறிவகத்தில் விஜயதசமி விழாவும், கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் வட்டார உறுப்பினர்களுக்கான கலந்துரையாடலும் நடைபெற்றன.

மேலும் வாசிக்க >>>

போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது

Sunday, October 13th, 2024 at 7:22 (SLT)

கல்கிஸ்ஸ – ஒடியன் சந்தி பகுதியில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழ் – பருத்தித்துறை வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

Sunday, October 13th, 2024 at 7:20 (SLT)

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை பாலத்திற்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

புத்தளம் மாவட்டத்தில் 3,196 பேர் பாதிப்பு

Sunday, October 13th, 2024 at 7:16 (SLT)

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலையினால் 859 குடும்பங்களைச் சேர்ந்த 3196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

26 மாத ஜனாதிபதிப் பதவிக்காலத்தில்: ரணில் 24 நாடுகளுக்குப் பயணம்

Sunday, October 13th, 2024 at 7:12 (SLT)

கடும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கைத்தீவு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக்காலமான 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் – 30 பேர் பலி: ஐ.நா அமைதி படை மீதான தாக்குதல் : உலகத் தலைவர்கள் கண்டனம்

Sunday, October 13th, 2024 at 6:53 (SLT)

வடக்கு காசா பகுதியில் ஜபாலியா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் ஐக்கிய நாடுகளின் அமைதி படையினர் மீது மேற்கொண்ட தாக்குதல்களுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது

Saturday, October 12th, 2024 at 10:46 (SLT)

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மகிந்தவின் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் இரண்டு வளர்ப்பு யானைகள்

Saturday, October 12th, 2024 at 10:43 (SLT)

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு சொந்தமான தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் இரண்டு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுவதாக பல்வேறு தரப்புகளில் இருந்தும் தகவல்கள் கசிந்துள்ளன. மகிந்த ராஜபக்‌சவின் தங்காலை, வீரகெடிய வீதியில் உள்ள தோட்டத்திலேயே இரண்டு யானைகள் இவ்வாறு பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அநுரவின் ஆட்சியில் அரசியல் தீர்வுக்கு வழியில்லை : அருட்தந்தை சத்திவேல்

Saturday, October 12th, 2024 at 10:39 (SLT)

தமிழர்களுக்கு எதிராக தமது உறுப்பினர்களை உள்நுழைய வைத்து யுத்தத்தை தீவிர படுத்தியதோடு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அரங்கேற்றியவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினரே இவர்களின் காலத்தில் அரசியல் தீர்வுக்கும் வழியில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பலத்த காற்று கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தல்

Saturday, October 12th, 2024 at 10:34 (SLT)

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தலின் பின்னர் பல கட்சிகள் அநுரவுக்கு ஆதரவு: கொள்கை பிரச்சினையால் கூட்டணி அமைக்கவில்லை

Saturday, October 12th, 2024 at 10:32 (SLT)

பொதுத் தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிகளில் போட்டியிட்ட பல கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியின் கீழ் போட்டியிட பேச்சுகள் நடத்திய போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் கிடைத்திருக்கவில்லை.

மேலும் வாசிக்க >>>