முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: தொடர்ந்தும் வழங்கப்படுகிறது

Saturday, October 12th, 2024 at 10:30 (SLT)

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மீள அழைக்கப்பட்ட போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக குறிப்பிட்ட தொகையிலான பாதுகாப்புப் படையினர் கணிசமான எண்ணிக்கையிலான கமாண்டோக்களையும் இராணுவத்தினரையும் ஈடுபடுத்தி வருகின்றமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுரவிற்கு சமந்தா பவர் அளித்த உறுதிமொழி

Saturday, October 12th, 2024 at 10:26 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

மஹிந்தவின் இல்லத்தை இடம் மாற்றுமாறு பணிப்புரை

Saturday, October 12th, 2024 at 10:22 (SLT)

இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்குமாறு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வானில் வட்டமடித்த விமானம்: நடுவானில் நடந்தது என்ன? திக் திக் நிமிடங்களை விவரித்த பயணி

Friday, October 11th, 2024 at 22:59 (SLT)

திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமடித்தது. விமானம் புறப்பட்ட நிலையில், அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாத நிலையில், 140க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் விமானத்தின் எரிபொருள் தீர்ந்தவுடன் அதனை பத்திரமாக தரை இறக்கும் முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. தமிழகத்தில் சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையம் விமான போக்குவரத்து துறையில் முக்கிய பங்காற்றுகிறது.

மேலும் வாசிக்க >>>

யாழ் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் போட்டி : இரு வேட்புமனுக்கள் நிராகரிப்பு

Friday, October 11th, 2024 at 19:58 (SLT)

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 46 வேட்புமனுகள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கையளிக்கபட்ட நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

Friday, October 11th, 2024 at 19:53 (SLT)

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த வாரம் முதல் ரூ.3000 மாதாந்தக் கொடுப்பனவு :அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை

Friday, October 11th, 2024 at 19:51 (SLT)

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம் பெற்றுள்ள பெருந்தொகை கடன்

Friday, October 11th, 2024 at 8:45 (SLT)

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆசியான் – இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு இன்று: எதிர்கால இலக்குகள் குறித்து மோடி ஆலோசனை

Friday, October 11th, 2024 at 8:39 (SLT)

ஆசியான் – இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு இன்று வெள்ளிக்கிழமை லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடைபெறுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா இணைந்த ஆசியான்-இந்தியா அமைப்பின் தற்போதைய தலைவராக லாவோஸ் உள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் எங்கே: தொடரும் விசாரணைகள்

Friday, October 11th, 2024 at 8:37 (SLT)

கடந்த சில வருடங்களுக்குள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரசியல்வாதிகள் உள்ளிட்ட வெவ்வேறு நபர்கள் பெற்றுக்கொண்ட 1690 துப்பாக்களில் 30 மாத்திரம் தற்போது வரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெலிசற கடற்படைத் தளத்தில் இவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

24 வீதமானவர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிப்பு: அதிகமானோர் பெண்கள்

Friday, October 11th, 2024 at 8:34 (SLT)

புற்று நோயாளர்களுள் 24 வீதமானவர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வருடாந்தம் மார்பகப் புற்று நோய்க்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 5000 ஆக பதிவாகியுள்ளதாகவும் மாத்தளை மாவட்ட தொற்றாநோய் பிரிவின் வைத்தியர் சமாலா மதுஷானி விக்கிரம தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

நாட்டில் இன்று 200 மி.மீ.க்கும் அதிக கடும் மழை! 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Friday, October 11th, 2024 at 8:30 (SLT)

நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பு காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவில் வாள்வெட்டு : ஒருவர் பலி

Friday, October 11th, 2024 at 8:27 (SLT)

ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் போட்டி : எம். ஏ சுமந்திரன்

Friday, October 11th, 2024 at 8:23 (SLT)

திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி இம்முறை வீட்டுச் சின்னத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் என்றும் முதன்மை வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச. குகதாசன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகூடிய ஆசனங்களை பெறும்‌ கட்சியாக எமது கட்‌சி : சிவனேசதுரை சந்‌திரகாந்தன்‌

Friday, October 11th, 2024 at 8:21 (SLT)

எதிர்வரும்‌ பாராளுமன்ற தேர்தலில்‌ எமது கட்‌சி கிழக்கு மாகாணத்தில்‌ அதிகூடிய வாக்குகளை பெறும்‌ எனும்‌ நம்பிக்கை எமக்கு உள்ளது, இது வரலாற்றில்‌ ஓர்‌ திருப்புமுனையாக கூட இருக்கலாம்‌, என தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சியின்‌ தலைவர்‌ சிவனேசதுரை சந்‌திரகாந்தன்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும் வாசிக்க >>>