வடக்கு கிழக்கு தமிழர்களை தலைமை தாங்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது : விநாயகமூர்த்தி முரளிதரன்

Friday, October 11th, 2024 at 8:14 (SLT)

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இடையே காணப்படும் ஒற்றுமை மற்றும் பதவி மோகம் காரணமாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியானது தமிழ் மக்களுக்கு பாரிய துரோகம் இழைத்துள்ளது பண ஆசையில் சிக்குண்டு பல கூறுகளாக பிரிந்து தமிழர்களுக்கு பாரிய துரோகங்களை இழைத்து விட்டனர்- தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு .

மேலும் வாசிக்க >>>

6 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Thursday, October 10th, 2024 at 14:16 (SLT)

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

உத்தியோகப்பூர்வ இல்லங்களை கையளிக்காத முன்னாள் அமைச்சர் அநுர அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை

Thursday, October 10th, 2024 at 14:13 (SLT)

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களில் 14 வீடுகள் மாத்திரமே இதுவரை கையளிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 41 குடியிருப்புகள் வழங்கப்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் புதிய பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்

Thursday, October 10th, 2024 at 14:08 (SLT)

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று முற்பகல் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும் வாசிக்க >>>

சேர்பியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்கவில் கைது

Thursday, October 10th, 2024 at 14:04 (SLT)

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி சேர்பியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற எட்டு பங்களாதேஷ் பிரஜைகள் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லை அமலாக்கப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுபவின் வங்கி கணக்குகள் முடக்கம் நீதிமன்றம் உத்தரவு

Thursday, October 10th, 2024 at 14:01 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவலுக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகளை தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதிக்கும் சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

Thursday, October 10th, 2024 at 13:56 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. அரசாங்கத்தின் விரிவான பொருளாதார மற்றும் ஒழுங்குபடுத்தல் மறுசீரமைப்புகளுக்கு ஏற்ப இந்த இரண்டு திணைக்களங்களிலும் வருமானம் ஈட்டல் மற்றும் செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மூலோபாய திட்டங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Thursday, October 10th, 2024 at 7:42 (SLT)

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் (10.10.2024) நிறைவடைகிறது.

மேலும் வாசிக்க >>>

இறுதிநேரத்தில் அமெரிக்க பயணத்திற்கு தடை: நெதன்யாகு உறுதி

Thursday, October 10th, 2024 at 7:37 (SLT)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டினுடைய அமெரிக்க பயணத்திற்கு தடை விதித்துள்ளார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினை நேற்று (10) பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்டின் சந்திக்கவிருந்த சந்தர்ப்பத்தில் நெதன்யாகுவிடம் இருந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சஜித் பிரேமதாசவின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸார் தகவல்

Wednesday, October 9th, 2024 at 12:05 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிறை கைதிகள் தப்பியோட்டம் – மூவர் பணியிடை நீக்கம்

Wednesday, October 9th, 2024 at 12:01 (SLT)

அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நான்கு கைதிகள் கடந்த முதலாம் திகதி தப்பிச் சென்றதைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் போராட்டத்துக்கு ஆதரவாக பதவியை ராஜினாமா செய்த 54 மூத்த மருத்துவர்கள்

Wednesday, October 9th, 2024 at 11:56 (SLT)

கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 54 மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவில் விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

Wednesday, October 9th, 2024 at 11:48 (SLT)

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகள்

Wednesday, October 9th, 2024 at 11:44 (SLT)

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் திருகோணமலை மாவட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் மாவட்ட செயலகத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

சீன கப்பலின் வருகை நாட்டின் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தாது : விஜித ஹேரத்

Wednesday, October 9th, 2024 at 11:42 (SLT)

சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சகல நாடுகளுடனும் சமமான விதத்திலேயே, செயற்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இந்தியாவைப் போன்றே, சீனா தொடர்பான செயற்பாடுகளையும் அரசாங்கம் கையாள்வதாக தெரிவித்த அவர், இந்த வகையிலே, சீன இராணுவப் பயிற்சிக் கப்பலொன்று இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>