கொழும்பை வந்தடைந்த சீனப் போர்க் கப்பல்! கூட்டு பயிற்சியில் இலங்கை கடற்படை

Wednesday, October 9th, 2024 at 11:39 (SLT)

சீன இராணுவத்திற்கு சொந்தமான பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் சம்பிரதாயப்பூர்வமாக சீன கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்பளித்தனர்.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்றத் தேர்தலுக்காக 08 நாடுகளில் இருந்து கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு

Wednesday, October 9th, 2024 at 11:36 (SLT)

நாடாளுமன்ற தேர்தலை கண்காணிப்பதற்காக 08 நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சார்க் நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

185,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகள் ஏலம்: விலைமனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம்

Wednesday, October 9th, 2024 at 7:09 (SLT)

திறைசேரி முறிகளை இன்று புதன்கிழமை (09.10.2024) ஏலத்தில் விடுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதன்படி, 185,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறிகளை ஏலத்தில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சஜித் அணியில் தொடரும் சிக்கல்கள்: பட்டியலும் மாற்றம்

Wednesday, October 9th, 2024 at 7:05 (SLT)

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இன்னும் குறிப்பிட்ட சில தினங்களே காணப்பட்டு வரும் நிலையில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட சஜித் பிரேமதாச மற்றும் ரணில் தரப்பில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இம்முறை போட்டியிடப் போவதில்லை என தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை: கமலா ஹாரிஸ் உறுதி

Wednesday, October 9th, 2024 at 6:57 (SLT)

உக்ரெய்ன் இல்லாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை இல்லை என கமலா ஹாரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான உக்ரெய்ன் தற்காப்பு நடவடிக்கைகளை தாங்கள் ஆதரிப்பதாகவும் உக்ரெய்ன் ஆதரிப்பதில் பெருமை கொள்வதாகவும் கமலா ஹாரிஸ் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ். இளைஞனிடம் மோசடி : ஒருவர் கைது

Tuesday, October 8th, 2024 at 12:02 (SLT)

பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான்.

மேலும் வாசிக்க >>>

குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

Tuesday, October 8th, 2024 at 11:58 (SLT)

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் இணைப்பாளரான குருசாமி சுரேந்திரன் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நடந்துவரும் ஐ.நா மனித உரிமை பேரவையினுடைய கூட்டத்தொடருக்கு, எமது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி குற்றவிசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கோரிக்கையுடன் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கடித வரைபை கடந்த 2024 ஐப்பசி ஓராம் திகதி சமர்ப்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு எம்.எஸ்.பீ. சூரியப்பெரும நியமனம்

Tuesday, October 8th, 2024 at 11:47 (SLT)

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவி செப்டம்பர் 24 ஆம் திகதி முதல் வெற்றிடமாக உள்ளது. இதன்படி, தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் எம்.எஸ்.பீ. சூரியப்பெரும, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவியில் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் சேவை நிறுத்தம்

Tuesday, October 8th, 2024 at 11:44 (SLT)

மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் சேவையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றி இறக்குமதி : ஜனாதிபதி அநுர பணிப்பு

Tuesday, October 8th, 2024 at 11:41 (SLT)

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 19 சீன பிரஜைகள் கைது

Tuesday, October 8th, 2024 at 11:37 (SLT)

இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட மேலும் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாவல பகுதியில் வைத்து குறித்த 19 பேரும் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வாசிக்க >>>

தகுதியறிந்து வேட்புமனு வழங்கப்பட வேண்டும்: மார்ச் 12 அமைப்பு அறிவித்தல்

Tuesday, October 8th, 2024 at 7:34 (SLT)

பொதுமக்கள் அகௌரவத்திற்கு உள்ளான வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்காமலிருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மார்ச் 12 அமைப்பு அனைத்து அரசியல் கட்சி, சுயாதீன குழுக்களுக்கு அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு : மஹிந்த அமரவீர விளக்கம்

Monday, October 7th, 2024 at 9:55 (SLT)

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்தவர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானிய மொழி ஆசிரியரின் மோசடி அம்பலம்

Monday, October 7th, 2024 at 9:52 (SLT)

ஜப்பானில் உயர் கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஜப்பானிய மொழி ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பயன்படுத்திய சொகுசு காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Monday, October 7th, 2024 at 9:50 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>