இலங்கையில் இருந்த பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு

Monday, October 7th, 2024 at 9:48 (SLT)

கைதிகள் பரிமாற்றச் சட்டத்தின் கீழ், இந்த நாட்டில் சிறையில் இருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் கைதிகள் குழுவொன்று பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இருவருக்கு இடையில் தகராறு ; பெண்ணொருவர் கொலை

Monday, October 7th, 2024 at 9:46 (SLT)

கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் இருந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

நீராட சென்ற இரு மாணவர்கள் சடலங்கலாக மீட்பு

Monday, October 7th, 2024 at 9:42 (SLT)

இரத்தினபுரி அங்கம்மன ஆற்றின் இறங்கு துறையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரண்டு பாடசாலை சிறுவர்கள் நேற்று பலியாகியுள்ளனர். இவர்கள் இருவரும் பிரிவெனா ஒன்றின் மாணவர்கள் எனவும், குளித்துக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாகவும் இவர்களது இருவரின் சடலங்களும் இந்த ஆற்றின் மணல் அகழும் இடம் ஒன்றில் கரையொதுங்கி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

Sunday, October 6th, 2024 at 11:15 (SLT)

இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி

Sunday, October 6th, 2024 at 11:10 (SLT)

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொலிஸ் செயற்பட்ட விதத்தில் சமூகத்தின் முன் பொலிஸார் தொடர்பில் நல்லதொரு பிம்பத்தை கட்டியெழுப்ப முடிந்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தொடர்ந்தும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு: பிரதமர் நடவடிக்கை

Sunday, October 6th, 2024 at 11:05 (SLT)

நாட்டில் தொடர்ந்தும் 80 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளை வைத்தியசாலை மட்டத்தில் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவு: மலேசியா பிரதமர் தெரிவிப்பு

Sunday, October 6th, 2024 at 10:58 (SLT)

மலேசியா ஆசியானின் தலைமைத்துவத்தை அடுத்த ஆண்டு (2025) ஏற்றக் தயாராகிவரும் வேளையில், ஆசியான் நாடுகளுடன் வலுவான உறவுகளைப் பேண அது கடப்பாடு கொண்டிருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். சிஎன்பிசி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் வாசிக்க >>>

புதிய கூட்டணிக்கு ரணிலே தலைவர்: சமன் ரத்னப்பிரிய 

Sunday, October 6th, 2024 at 10:54 (SLT)

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய ஜீப் வண்டி 

Sunday, October 6th, 2024 at 10:51 (SLT)

பதுளை பகுதியில் வர்த்தகர் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சொகுசு ஜீப் ரக வாகனமொன்றை கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு கைப்பற்றியுள்ளது. சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட குறித்த சொகுசு ஜீப் ரக வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற தயாராகும் மகிந்த ராஜபக்ச

Sunday, October 6th, 2024 at 10:47 (SLT)

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் வாசிக்க >>>

பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள்

Sunday, October 6th, 2024 at 10:44 (SLT)

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் பிரதான அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் ஆரம்பமாகின.

மேலும் வாசிக்க >>>

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் சிறீரெலோ

Sunday, October 6th, 2024 at 10:37 (SLT)

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமது கட்சி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்திருந்தது, எனினும் மக்கள் எமக்கு அன்று அளித்த வாக்கு எண்ணிக்கை வன்னியில் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சியாக எம்மை உருவாக்கியது என்று சிறீரெலோ கட்சி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐ.நாவில் இலங்கை குறித்த தீர்மானத்தை காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளியுங்கள் புதிய அரசாங்கத்திடம் 25 சிவில் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

Sunday, October 6th, 2024 at 10:31 (SLT)

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேல் மீது தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி

Saturday, October 5th, 2024 at 9:28 (SLT)

ஐந்தாண்டுகளில் முதன்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு அயதுல்லா அலி காமேனி தொலைக்காட்சி வழியே மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் ஆயுதப்படையினர் நடத்திய ஏவுகணைத்தாக்குதல், மிகச்சிறப்பான பணி என்று பாராட்டினார்.

மேலும் வாசிக்க >>>

13ஆம் திருத்தம் முழுமையாக நடைமுறைக்கு ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்து

Saturday, October 5th, 2024 at 9:23 (SLT)

மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம்(04) இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துப் பேசினார்.

மேலும் வாசிக்க >>>