பேலியகொடையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Sunday, November 17th, 2024 at 11:48 (SLT)

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்பு

Sunday, November 17th, 2024 at 11:45 (SLT)

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16) காலை கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

முர்து பெனாண்டோ பிரதம நீதியரசர் ஆகிறார்

Saturday, November 16th, 2024 at 18:45 (SLT)

பிரதம நீதியரசராக முர்து பெனாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே அணியாக பொது பிரச்சினைகளை கையாள உள்ளேன் : செல்வம் அடைக்கலநாதன்

Saturday, November 16th, 2024 at 16:31 (SLT)

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொது பிரச்சினைகளை நாங்கள் கையாளுகின்ற வகையிலே செயல்பட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொடவெஹெரவில் உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Saturday, November 16th, 2024 at 16:19 (SLT)

கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அஹூபொடகம பிரதேசத்தில் , உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றம் செல்லும் நாமல்

Saturday, November 16th, 2024 at 16:14 (SLT)

2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தலுக்கு பிந்தைய காலம் தொடர்பில் விசேட அறிவிப்பு

Saturday, November 16th, 2024 at 16:07 (SLT)

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பிந்தைய காலம் அமுலில் இருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ, தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுக் கூடத்தில் தீ விபத்து

Saturday, November 16th, 2024 at 11:06 (SLT)

மாத்தளை – உக்குவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விஞ்ஞான ஆய்வுக் கூடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : தந்தை பலி மகன் காயம்

Saturday, November 16th, 2024 at 11:00 (SLT)

அநுராதபுரம், ஹபரணை, பெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

மறுமலர்ச்சி யுகத்துக்கு தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி : ஜனாதிபதி

Saturday, November 16th, 2024 at 10:55 (SLT)

மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அமோக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் : எரிக்சொல்ஹெய்ம்

Saturday, November 16th, 2024 at 10:52 (SLT)

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மகத்தான பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கும் வாகனம் மடக்கி பிடிப்பு

Saturday, November 16th, 2024 at 10:48 (SLT)

மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் வாகனத்தினை முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடளாவிய ரீதியில் இடியுடன் கூடிய மழையும் மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம்

Saturday, November 16th, 2024 at 10:43 (SLT)

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் மேலும் உகந்ததாகக் காணப்படுகின்றது. இதன்போது இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட்டு இழப்புகளை அல்லது சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் : வி.எஸ்.சிவகரன்

Saturday, November 16th, 2024 at 10:39 (SLT)

கடந்த எழுபது ஆண்டு கால அரசியல் உரிமைக்கான ஜனநாயக மற்றும் ஆயுதப் போராட்டங்களை எதிர்கொண்ட தமிழினம் பல்வேறு விதமான இழப்புகளையும், நெருக்கடிகளையும், வலிகளையும், வாழ்வியல் சுமைகளையும் எதிர்கொண்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை : இரு இளைஞர்கள் கைது

Saturday, November 16th, 2024 at 10:35 (SLT)

புத்தளம், சாலியவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>