ஈரான் செய்தது மிகப் பெரிய தவறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

Wednesday, October 2nd, 2024 at 10:50 (SLT)

இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியது அமெரிக்கா: மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம்

Wednesday, October 2nd, 2024 at 10:45 (SLT)

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

Wednesday, October 2nd, 2024 at 7:45 (SLT)

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விவகாரம் : அமைச்சரவை தீர்மானம்

Tuesday, October 1st, 2024 at 12:18 (SLT)

சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பங்குகளின் 51 சதவீதத்தை விற்பனை செய்ய கடந்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை நிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம்

Tuesday, October 1st, 2024 at 12:13 (SLT)

வடமாகாண ஆளுநர் செயலகத்தின பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375 மற்றும் 021 221 9376 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறையிடலாம் என ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நான் தவறு செய்யாததினால் எவரும் கொல்லவோ, அடிக்கவோ முயற்சிக்க மாட்டார்கள் : மைத்திரிபால சிறிசேன

Tuesday, October 1st, 2024 at 12:08 (SLT)

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு மற்றும் இதர அரச சேவைகள் நிறுத்தப்பபடும் என அநுர தலைமையிலான அரசாங்கம் தெரிவித்து அதனை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் இந்த பாதுகாப்பு சேவை நீக்கப்படுவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முப்படை வீரர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் : பாதுகாப்பு அமைச்சு அறிக்கை

Tuesday, October 1st, 2024 at 12:04 (SLT)

விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்படும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள், முழுமையாக நிறுத்தப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விஷேட பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களுக்காக வழங்கப்பட்டு வரும் விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும் வாசிக்க >>>

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து

Tuesday, October 1st, 2024 at 12:00 (SLT)

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை நேற்று (30) அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இடைநிறுத்தம் : ஜனாதிபதி ஆலோசனை

Tuesday, October 1st, 2024 at 11:57 (SLT)

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அனுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி

Tuesday, October 1st, 2024 at 11:54 (SLT)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதன்போது, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அமெரிக்க தூதுவர்,

மேலும் வாசிக்க >>>

தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டி:சி.வி விக்னேஸ்வரன்

Tuesday, October 1st, 2024 at 8:48 (SLT)

சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்: இன்று சிறுவர் தினம்

Tuesday, October 1st, 2024 at 8:40 (SLT)

2024 ஆம் ஆண்டு உலகளாவிய சிறுவர்கள் தினத்தின் கருப்பொருள் “ஒவ்வொரு குழந்தையையும் சமமாகப் பாதுகாத்து நடத்துங்கள்.” ஒவ்வொரு குழந்தையும், இனம், மதம், அல்லது தோல் நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், சமமான அக்கறையுடனும் பாதுகாப்புடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் பலி

Monday, September 30th, 2024 at 12:51 (SLT)

மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். மகாதெனிய, பலாலி மற்றும் இப்பாகமுவ பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழில் நடமாடும் சேவை

Monday, September 30th, 2024 at 12:47 (SLT)

சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரையில் நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யுக்திய மறுசீரமைப்புடன் விரைவில் முன்னெடுக்கப்படும் : பதில் பொலிஸ் மாஅதிபர் 

Monday, September 30th, 2024 at 12:44 (SLT)

‘யுக்திய’ நடவடிக்கையை அமுலாக்குவதிலுள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சீர்செய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைவாக தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வரென பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>